9123 காற்றில் கலந்தவை.

கரவையூர்ச் செல்வம். யாழ்ப்பாணம்: அமலமரி தியாகிகள் சபை வெளியீடு, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம், 392 பிரதான வீதி).

xxiv, 238 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12.5 சமீ.

இலங்கை வானொலியில் கத்தோலிக்க நிகழ்ச்சிப் பிரிவில்  ஆசிரியர் ஆற்றிய  54 உரைகளின் தொகுப்பு. யாழ். ஆயர் எமிலியானுஸ் ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி வானொலியில் 20.7.1972 அன்று ஒலிபரப்பப்பட்ட சிறப்புரை முதலாவதாக நினைவுகள் சாவதில்லை என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது. தொடர்ந்து, பொங்கலோ பொங்கல், அ.ம.தி.125, நத்தார் எமக்கொரு சவால், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், பொருளாதாரம் போதாது, இயுஜின் டி மசெனெட், அன்பு நாகரிகம், கடமையா கடவுளா, அன்பு, மீட்பு, உயிர்த்த இரவு, செபம், மன்னிப்பு, என இன்னோரன்ன தலைப்புகளில் இவ்வுரைகள் அமைந்துள்ளன. தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் இந்நூலுக்கு வழங்கியஅணிந்துரையில் ‘ஒவ்வொரு பேச்சிலும் பொருள் பொதிந்து கிடக்கின்றது. உணர்ச்சி வீறிட்டுப் பாய்கின்றது. உண்மைகள் துலக்கப்படுகின்றன. குற்றங்கள் கடியப்படுகின்றன. உவமைகள் சொல்லப்படுகின்றன. இங்கே யான் காட்டியவை கரவையூர்ச் செல்வம் வழங்கியவை. என் உள்ளத்தைக் கவர்ந்தவை.’ என்று குறிப்பிட்டுள்ளார். அருட்திரு கரவையூர்ச் செல்வம் புதிய உலகம் என்ற பெயரில் சமூகத் தொடர்பு நிலையத்தால் வெளியிடப்பட்ட ஒரு சமூக இறையியல் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  77254). 

ஏனைய பதிவுகள்

17835 அன்றலர்ந்த மலர்கள்: சுய ஆய்வுக் கட்டுரைகள்.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, கொழும்பு: மீரா பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம்,

22 Finest Online casinos

Articles The most used Online Slot Themes | real money online casino no deposit Mr Bet Advantages and disadvantages Away from To try out Gambling

10308 பாடம் புகட்டும் பழமொழிகள்: தொகுதி 2.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). viii, 102 பக்கம், விலை: