9139 இந்து விரதங்களும் உடல்நலமும்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

xx, 168 பக்கம், படங்கள், விலை: ரூபா 325., அளவு: 18.5×12.5 சமீ.

இந்து சமய விரத அனுஷ்டான முறைகளை மருத்துவ அறிவியலுடன் தொடர்புபடுத்தி, விரத அனுஷ்டானங்களில் உடல் ஆரோக்கியத்துக்குரிய வழிமுறைகள் பல அடங்கியிருப்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்துகின்றார். அறிமுகம், விரதமும் உடல் நலமும், விரத வகைகள், மாதவாரியாக அனுஷ்டிக்கப்படும் விரதங்கள், மாதப் பொது விரதங்கள், விரத காலத்துக்குரிய முக்கிய உணவுகள் தயாரிப்பு முறை என 17 இயல்களில் இந்நூல் விரிகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 182903).

ஏனைய பதிவுகள்

13808 விந்தை மனிதர்கள்: அறிவியல் மர்ம நாவல்.

கனி விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா றிட்ஜ்வே விமலநாதன்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை