வி.செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: திருமதி கௌரி செல்வரத்தினம், அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, அராலி, 1வது பதிப்பு, ஜூலை 1998. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம்).
viii, 71 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×14 சமீ.
சுந்தரமூர்த்தி நாயனார் பற்றி விரிவாகக் கூறும் இந்நூலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தரர் எப்படி சிவபெருமானுடன் தோழமைகொண்டு இருந்தார் என்பது பற்றியும் அவர் சென்று திருப்பதிகம்பாடி அற்புதம் நிகழ்த்திய ஆலயங்களைப் பற்றியும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாக இந்நூலில் எழுதியிருக்கிறார். நூலாசிரியர் அருள்நெறிச் செல்வர் திரு. விசுவலிங்கம் செல்வரத்தினம் அராலி, ஆனைக்கோட்டை பிரதேசங்களின் பல அமைப்புகளுடனும் இணைந்து சேவையாற்றியவர். தனியார் கல்வி நிறுவனமொன்றில் நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். பல்வேறு விஞ்ஞான, கணித அறிவியல் நூல்களையும் எழுதியவர். சமயத்துறையில் அவரது ஈடுபாடு இந்நூலுருவில் துலங்குகின்றது. ஒக்டோபர் 1995இல் வலிகாமம் புலப்பெயர்வின்போது இடம்பெயராது மத நம்பிக்கையுடன் தனது சிவநம்பிக்கைக்குரிய வண்ணபுரம் சிவன் ஆலயத்தின் சுற்றாடலில் தங்கி வாழ்ந்தவர். ஆலயப் பூந்தோட்டத்தின் அபிவிருத்திப் பணிக்கான நிதியுதவி பெறும்பொருட்டு இந்நூலின் விற்பனையை ஒதுக்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131022).