9161 தவ முனிவனின் தமிழ் மந்திரம்.

சிவ மகாலிங்கம். யாழ்ப்பாணம்: சிவ.மகாலிங்கம், சிவஜோதி, பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, ஜுலை 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 681, காங்கேசன்துறை வீதி).

xvi, 232 பக்கம், விலை: ரூபா 490., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-44645-0-6.

சிவத்தமிழ் வித்தகர், திருமந்திரவாரிதி, கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப்பெற்ற சிவ மகாலிங்கம் அவர்கள் தான் எழுதிய 45 ஆன்மீகக் கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். தவயோகியின் திரு அவதாரம், சித்த புருஷர்களில் மூலவர் திருமூலர், சிவனே முழுமுதற் தெய்வம், குருவருளின்றித் திருவருள் இல்லை, கூத்தன் புறப்பட்ட கூடு, கொல்லாமையே சிறந்த அறம், அன்பே சிவம், ஞான ஒளி, போன்ற இன்னோரன்ன தலைப்புக்களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை திருமூலரின் திருமந்திரத்தை விளக்குவதாய் அமைந்துள்ளமையை அவதானிக்கமுடிகின்றது. நூலாசிரியர் ஏற்கெனவே திருமுறைச் செல்வம், சிவஜோதி, முருக மந்திரம், ஞானதீபம், தரிசனங்களும் வாழ்வியலும் ஆகிய 5 நூல்களை எழுதியுள்ளார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  233285).

ஏனைய பதிவுகள்

12709 – நாடகமும் அரங்கியலும்.

க.திலகநாதன். வல்வெட்டித்துறை: திருமதி சிவாஜினி திலகநாதன், ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 2வது பதிப்பு, வைகாசி 2009, 1வது பதிப்பு, பங்குனி 2008. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½,

11288 மொழிதல்:ஆய்விதழ் 3: எண் 1.

சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சு.சிவரெத்தினம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆனி 2016. (கொழும்பு 6: குமரன்