கலைவாணி புத்தக நிலையம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).
iv, 122 பக்கம், படங்கள், விலை: சதம் 80., அளவு: 18×12.5 சமீ.
அரசினரின் 1969ஆம் ஆண்டு சைவ சமய பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டது. கடவுளின் பெருமையை உணர்த்தும் சிறுகதைகள், இனிய பக்திப் பாடல்கள், பாடக் குறிப்புகள், நீதி வாக்கியங்கள், இளையான்குடிமாற நாயனார், பூசலார் நாயனார், தண்டியடிகள் நாயனார், கண்ணப்பர், திலகவதியார், மார்க்கண்டேயர் ஆகிய சமய குரவரின் சரித்திரங்கள், நயினாதீவு, முன்னேஸ்வரம், சித்திரவேலாயுத சுவாமி கோவில், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின் வரலாறுகள் ஆகியன இருபத்தேழு பாடங்களாக, ஆங்காங்கே தேவையான அளவுக்குப் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. கொழும்பு விவேகானந்த சபையாரால் நடத்தப்படும் சமய பாடப் பரீட்சைக்கு ஏற்பவும் விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104688).