விவேகானந்த சபை. கொழும்பு: விவேகானந்த சபை, திருத்திய பதிப்பு, 1973. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).
(3), 136 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ.
விவேகானந்த சபையினர் தாங்கள் அகில இலங்கை அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்திவரும் சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பயனுற வேண்டியும், இலங்கை அரசாங்க கல்வித்திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் இந்நூல் எழுதப்பட்டது. சைவ சமயப்பிரமாண நூல்கள், சைவ நாற்பாதங்களும் நால்வகை முக்;திகளும், திருக்கோவில் அமைப்பு, இறைவன் மூர்த்தங்கள், திருக்கோயில் வழிபாடு, சரியை வழிபாடு, திருக்கோயிற் கிரிகைள், பசு (ஆன்மா), பாசம், திருஞானசம்பந்தர் தேவாரம், திருநாவுக்கரச நாயனார் தேவாரம், அப்பர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், நீதிப்பகுதி -திருக்குறள், மங்கையர்க்கரசியார், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார், கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள், தாயுமான சுவாமிகள், சிவஞான முனிவர், மன்று தொழுத பதஞ்சலி, சிதம்பரம் ஆகிய 30 பாடங்களாக வகுத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104687).