9186 சைவ போதம்.

சு.சிவபாதசுந்தரம் (மூலம்), ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள் பதிப்பு, 2011. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

xvi, 182 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-9233-22-0.

சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரனார் சைவபோதம் என்ற பெயரில் எழுதி வெளியிட்ட சைவ போதம் என்ற நூலின் இரண்டு பாகங்களும்; இங்கு தனி நூலாக மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இந்நூல்கள் சிறுவர்களுக்கும் எளிதில் விளங்கத்தக்க வகையில் சைவ சமயக் கருத்துக்களை மிக எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகின்றது. நமது சமயத்தின் அடிப்படைத் தத்துவங்களை எளிதில் விளங்கிக்கொள்ள இந்நூல் துணைசெய்கின்றது. அறநெறிப் பாடசாலைகளின் பாவனைக்காக இந்நூல் திணைக்களத்தினால் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13207 ஐயப்பன் பாமாலை.

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்). (2), 30 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 18×12.5