சி.ஆ.கதிரித்தம்பி. நயினாதீவு: சி.ஆ.கதிரித்தம்பி, கணேசபதி, நயினார்தீவு-6, 1வது பதிப்பு, ஆனி 1980. (யாழ்ப்பாணம்:செட்டியார் அச்சகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை).
xvi, 137 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
64 சக்திபீடங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் பிரதிஷ்டை வரலாறும், இப்புண்ணியதலம் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் மணிமேகலை வரலாறும் பிந்திய வரலாறுகளும் அடங்கிய நூல். மதுரையில் வாழ்ந்த அடியாராகிய ஆபுத்திரனுக்கு, எடுக்க எடுக்கக் குறையாத அமுத சுரபியொன்றை சிந்தாதேவியாகிய கலைவாணி வழங்கியதாக ஐதீகமுண்டு. மதுரையிலிருந்து (இன்றைய இந்தோனேசியாவின் ஜாவா தீவாகக் கருதப்படும்) சாவக நாட்டுக்குச் செல்லும் வழியில் மரக்கலம் புயலில் சிக்குண்டு மணிபல்லவத்துக்கு ஆபுத்திரன் அமுதசுரபியுடன் வந்தடைகின்றான். புயல் நீங்கி மரக்கலம் புறப்பட்ட வேளையில் ஆபுத்திரனும் அவனது அமுத சுரபியும் மணிபல்லவத்திலேயே தங்கிவிடநேர்கின்றது. ஆபுத்திரன் அங்கேயே உயிர்நீத்ததான ஐதீகம் இந்நூலில் சுவையாக விளக்கப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122963).