9192 கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் திருத்தலம்.

சுபாஷிணி பத்மநாதன். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 3500., அளவு: 29.5×23.5 சமீ., ISBN: 978-955-0811-00-7.

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் திருத்தலம் பற்றிய விவரணம் செறிந்த நூல். இலங்கையில் சிவவழிபாட்டு முறைமை, திருத்தலம் அமைந்துள்ள பகுதி: கொச்சிக்கடை எனப் பெயர்பெறக் காரணம், திருத்தல வரலாறு, ஆலய பரிபாலன சபையும் அதன் வரலாற்றுப் பின்னணியும், திருத்தலம் மீது ஒரு சிறப்புப்பார்வை, திருத்தலச் சிற்பக்கலை நுணுக்கங்கள், திருத்தல நித்திய நைமித்தியக் கிரியைகள், ஆலய உற்சவங்கள், ஆலய மஹோற்சவத் திருவிழா, நாட்டிய அரசன் நடராஜரின் நாட்டிய தத்துவத்தின் மகிமையும் பெருமையும் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234899).

ஏனைய பதிவுகள்

9655 சாவித்திரி சரிதம்: பாட்டும் உரையும்.

வே.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: யாழ் இலக்கியவட்ட வெளியீடு, 1வது பதிப்பு, மாசி 1982. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). xxviii, 359 பக்கம், தகடு, விலை: ரூபா 50., அளவு: 21×14.5 சமீ. 1966ம் ஆண்டு இரசிகமணி