ச.சிவப்பிரகாச பண்டிதர் (மொழிபெயர்ப்பு). யாழ்ப்பாணம்: ராஜராஜ ஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் குடும்பத்தினர், கீரிமலை, 2வது பதிப்பு, ஆண்டுவிபரமில்லை, 1வது பதிப்பு, கலியுகம் ரு0கஉ (5012). (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 166 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
ஸ்காந்த பராணத்திலே தக்ஷிண கைலாச மான்மியத்திலுள்ள நகுலேசுவர மான்மியம் முதலில் நீர்வேலி ஸ்ரீ ச.சிவப்பிரகாச பண்டிதரவர்கள் செய்த மொழிபெயர்ப்புடன் அ.குமாரசுவாமிப் புலவரினால் யாழ்ப்பாணம்,வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றது. அந்நூலின் மீள்பதிப்பு, பின்னாளில் ஞானம்- கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் திரு. தி.ஞானசேகரனின் துணைவியார், திருமதி ஞானம் ஞானசேகர ஐயர் அவர்களின் அன்னையின் சிவபதப்பேற்றின் போது மீள்பிரசுரம் கண்டுள்ளது.