9197 வல்லியக்கனும் வல்லிபுரநாதரும்.

பொன்னம்பலம் இரகுபதி. யாழ்ப்பாணம்: என்.குகபரன், ஆசிரியர், புலரி ஆண்டிதழ்-2006, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: ஐ.சங்கர், பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 30., அளவு: 20×14.5 சமீ.

கலாநிதி பொ.இரகுபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர். ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டவர். பெருங்கற்கால யாழ்ப்பாணம் என்ற பாரிய தொல்லியல், வரலாற்று ஆவணத்தின் வருகைக்குப் பின்புலமாக நின்றவர். இச்சிறு கட்டுரைநூலில் வல்லியக்கன் என்ற பெயரில் புராதன வள்ளுவக் குடிகளால் (இவர்கள் பறையர் என பின்னாளில் அழைக்கப்பட்டவர்கள்) தொழப்பட்ட புராதன சிறுதெய்வ வழிபாடு, பின்னாளில் ஏற்பட்ட பிராமணிய ஆதிக்கத்தினால் வல்லிபுர நாதராக  உருமாற்றப்பெற்ற வரலாற்றை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் அமைந்த சிறு கோவில்களின் வரலாறுகளினூடாகப் பதிவுசெய்கின்றார். பின்னிணைப்புகளாக கோவும் மடைப்பறையும் (1983ம் ஆண்டு மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலை மலரில் வெளியான கட்டுரை), மயான உருத்திரன் (1984ம் ஆண்டு ஈழநாடு வாரமலரில் வெளியான கட்டுரை) ஆகிய இரு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்