9334  நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்.

புஷ்பராணி யோகராசா. யாழ்ப்பாணம்: சசிகலா வெளியீடு, 36/11, காட்டுக் கந்தோர் ஒழுங்கை, சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி, சுண்டிக்குளி).

(3), 48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 4.50, அளவு: 21.5×13.5 சமீ.

இயற்கையும் அழகும், காவியங்களும் அழகும், பொருள்களும் அழகும், அழகின் முக்கியத்துவம், அழகின் இருப்பிடம், தோல், சருமம் பொன்நிறமாகும் இரகசியம், பொன் மேனியைப் பேணும் முறை, தலைமயிர், நெற்றி அழகு, கண் அழகு, மூக்கு அழகு, மீசை தாடி அழகு, உதட்டின் அழகு, பல்லழகு, காது அழகு, முக அழகு, இடைப்பட்ட அங்க அழகு, கீழ் அங்க அழகு ஆகிய 19 அத்தியாயங்களில் இந்த அழகியல் நூல் சித்திர விளக்கங்களுடன் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 88603).     

ஏனைய பதிவுகள்

16898 அருள் கலசம் 60.

ஞான. திருக்கேதீஸ்வரன். இணுவில்: அருள் மணிவிழாச் சபை, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).  88 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.