9374 தமிழ் மொழியும் இலக்கணமும்.

பாலசிங்கம் பாலகணேசன். யாழ்ப்பாணம்: பா.பாலகணேசன், தமிழ்த்துறை விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: சத்தியா பிறின்டெர்ஸ், 153/11 நாவலர் வீதி).

xii, 132 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.

முகிழ்நிலை ஆசிரியர்களுக்கும், க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் உதவக்கூடிய வகையல் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பமும் தமிழும், தமிழின் கிளைமொழிகள், தற்காலத் தமிழின் ஒலியன் அமைப்பு, போலி எழுத்துக்கள், மாத்திரை, சுட்டெழுத்துக்கள், முதநிலை எழுத்துக்கள், இடைநிலை மெய்மயக்கம், ஈற்றுநிலை எழுத்துக்கள், புணரியல், தமிழின் இரட்டை வழக்கு, சொல்லும் சொற்கூறுகளும், பெயர்ச்சொல், வேற்றுமைகள், ஆகுபெயர், தொடரியல், வினைச்சொல், வினை காலம் உணர்த்துதல், வாக்கியம், உசாத்துணை ஆகிய 20 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234581).                                                                                                                                                                                                           

11A24

தமிழ் மொழியும் இலக்கணமும்: உயர்தர வகுப்பிற்குரியது.

பாலசிங்கம் பாலகணேசன். கொழும்பு 12: லங்கா பதிப்பகம், FL 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 12: லங்கா பதிப்பகம், குடு 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

x, 93 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

முகிழ்நிலை ஆசிரியர்களுக்கும், க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பமும் தமிழும், தமிழின் கிளைமொழிகள், தற்காலத் தமிழின் ஒலியென் அமைப்பு, தமிழின் இரட்டை வழக்கு, தற்காலத் தமிழின் உருபெண் அமைப்பு, பெயர்ச்சொல், வேற்றுமைகள், வினைச்சொல், வினை காலம் உணர்த்துதல், உசாத்துணை ஆகிய 10 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (பின்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9374)

ஏனைய பதிவுகள்

5 Minimal Deposit Casinos In the usa

Blogs Rabcat games | Faq’s Out of Uk On-line casino Participants Try Sportsbook Incentives Beneficial? Ideas on how to Enjoy 5 Dollar Put On-line casino

14590 ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம்.

ஜே.பிரோஸ்கான். கிண்ணியா 3: ஜே.பிரோஸ்கான், பேனா பப்ளிக்கேஷனஸ், 92/4, உமர் ரழி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 104 பக்கம்,