9391 அறிவியல் பேழையில் ஒரு சில மணிகள்.

அநு.வை.நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு 12: நிஸான் பிரின்ரேர்ஸ்).

viii, 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×18 சமீ., ISBN: 955-98393-5-7.

இந்நூல் வானியல், உயிரியல்-தாவரவியல், அறிவியற் பாதையிற் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ்  பதினெட்டு அறிவியல் கட்டுரைகளைத்  தரம்பிரித்து வழங்குகின்றது. வானியல் என்ற பிரிவின்கீழ் வானிற் காணும் கருந்துவாரம், ஓசோன் வாயுவும் அதன் பயன்பாடுகளும், வானலைகளில் பண்பலைகள், கேளா ஒலியும் அதன் பரம்பலும், மிகையொலியும் அதன் பரம்பலும், மிகையொலி வானூர்தி-சுப்பர்சோனிக் ஆகிய ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொடரும் பிரிவான உயிரியல், தாவரவியல் என்ற பிரிவில் முதலை கண்ணீர் வடிக்குமா?, மனிதனுக்கு தோழனடி நாய், கணத்துக்குக் கணம் நிறம் மாறும் பச்சோந்தி, தோட்டக்கலையில் பொன்சாய் தாவரங்கள், சூழலை மாசுபடுத்தும் தாவரங்கள், புலாலுண்ணும் தாவரங்கள் ஆகிய ஆறு கட்டுரைகளும், அறிவியற் பாதையில் புதிய கண்டுபிடிப்புகள் என்ற பிரிவின் கீழ் நவீன அறிவியற் கண்டுபிடிப்புகளில் ஒலிநாடாப் பேழை, அதிசய மனிதன் ரோபோ, சாதனை பலபுரியும் கனியமே  யுரேனியம், பயன்தரும் லேசர் ஒலி, அறிவியல் உலகில் ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு ரேடியம், வண்ணப்பூச்சரமாய்ச் சொரியும் மத்தாப்பு ஆகிய ஆறு கட்டுரைகளுமாக சுவாரஸ்யமான மாணவர்களுக்கான அறிவியல் கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  155835).  

ஏனைய பதிவுகள்

Eingabeaufforderung Öffnen In Windows

Content Wie Ist Deine Reaktion? Textstarke Calls Machen Sie Den Nächsten Schritt: Flyeralarm Digital Ist An Ihrer Seite Seien Sie Einer Der Ersten! Problem: Text