9420 இலங்கை வளமும் தால விலாசமும்.

க.சோமசுந்தரப் புலவர். யாழ்ப்பாணம்: கீழைநாடு கல்விப் பட்டதாரிகள் சங்கம், Pundit and Vidwan Graduates Association, 1வது பதிப்பு, ஆவணி 1950. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம், வண்ணார்பண்ணை).

viii, 24 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் கீழைநாடு பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் செ.இளையதம்பி, சோ.இளமுருகனார் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ளது. தாலம் என்பது பனையையும், விலாசம் என்பது அழகு, வினோதம், விளையாட்டு ஆகியவற்றையும் குறித்து நிற்கின்றது. அவ்வகையில் தால விலாசம் என்ற இந்நூல் பனை பற்றியும், அதன் பல்வேறு பயன்கள் பற்றியும் அரிய தகவல்களை கலிவெண்பாவடிவில் தருகின்றது. 1940இல் வெளிவந்த தாலவிலாசம் என்ற தனது நூலின் முன்னுரையில், நவாலியூர் க. சோமசுந்தரப்புலவரவர்கள், தாலவிலாசம் என்ற பெயரில் முன்னர் ஒரு நூல் ஏட்டுப்பிரதியாக இருந்ததாகவும், அது செந்தமிழ்ப் புலமைமிக்க ஒருவரால் கலிவெண்பாவினால் பாடப்பட்டிருந்ததெனவும் அதனை வாய்ப்பாடமாகத் தனது தந்தை அறிந்திருந்தாரென்றும் குறிப்பிடுகிறார். அதில் சில வெண்பா அடிகளைத் தனக்குத்தன் தந்தை சிறுவயதில் கூறியிருந்தாரென்றும்- அந்நூல் பனை பூமியில் உண்டான வகையையும், அதன் பயன்களையும், அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் முறைகளையும் அத்தமிழ் நூல் தொகுத்துக்கூறியதாகவும் மேலும் குறிப்பிடுகின்றார். பின்னாளில் அந்த மூல ஏட்டுப்பிரதியைப் பெற்றிருந்த James Ferguson என்ற ஆங்கிலேயர், அதனை ஆங்கிலமொழியில் மொழிபெயர்த்து நூலுருவில் வெளியிட்டிருந்ததாகவும். கொழும்பு நூதனசாலையிலிருந்த அந்த ஆங்கில மொழிபெயர்ப்பையும், தன் தந்தையார் கூறிய வெண்பா அடிகளையும் கொண்டு தால விலாசத்தை மீண்டும் புலவரவர்கள் தமிழுக்குக் கொண்டுவந்து அதனை நூலுருவாக்கியுள்ளதாகவும் அந்த முகவுரையில் அறியமுடிகின்றது. தால விலாசம் என்ற பெயரில் நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர்; 1940இல் வெளியிட்ட நூல் பற்றிய விபரத்தை நூல்தேட்டம் பதிவு இலக்கம் 6526இல் காணலாம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85138).

ஏனைய பதிவுகள்

Pariuriplus Bonus Dar Achitare

Content Luck Casino Rotiri Gratuite Dar Plată Ce Virgină Tocmac Însoţi De Știi Asupra Gets Bet Bonus Fără Achitare Condiții De Rulaj Deasupra Care Cazinouri