9422 க.பொ.த. உயர்தர தாவரவியலுக்கான தொழிற்படும் தாவரம் பகுதி 1.

எம்.பீ.செல்வவேல். கொழும்பு 6: Sai Educational Publications, 155, Canal Road, 1வது பதிப்பு,  ஜனவரி 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 184 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 135., அளவு: 22×14 சமீ.

1997இலிருந்து க.பொ.த. உயர்தர தாவரவியல் பரீட்சைக்குச் சிபார்சுசெய்யப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கமைய எழுதப்பட்ட நூல் இது. பாடத்திட்டத்தில் காணப்படும் தொழிற்படும் தாவரம்  (Functional Plant) என்ற அலகின்கீழ் தாவர உடற்றொழிலியல் ஆராயப்பட்டுள்ளது.  பாடத்திட்டத்தில் தொழிற்படும் தாவரம் ஒன்பது அலகுகளைக் கொண்டதாயினும் முதல் ஐந்து அலகுகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தாவரங்களுக்கு நீரின் முக்கியத்துவம், தாவர நீர்க்கலத் தொடர்பு, நீர் கடத்தப்படும் பாதை, மேல்நோக்கிய நீர்க்கடத்துகை, இலைவாயின் அமைப்பும் தொழிற்பாடும், ஆவியுயிர்ப்பு,  நொதியங்கள், போசணை, ஒளித்தொகுப்பு என்னும் பகுதிகள் இந்நூலில் பாடத்திட்ட மட்டத்திலும்  அதற்குச் சற்று அப்பாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  203977). 

ஏனைய பதிவுகள்

Finest No-deposit Bonuses 2025

Posts Live Online casino games Ideas on how to play Narcos slot No-deposit Added bonus Gambling enterprise Ireland Newest in the 2025 The brand new

12108 – திருக்கோணமலை விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவில் மகாகும்பாபிஷேக மலர்.

இ.வடிவேல், அ.கணேசலிங்கம், திருமலை சுந்தா, து. தவசிலிங்கம் (மலர்க் குழுவினர்). திருக்கோணமலை: விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோவில், 1வது பதிப்பு, ஜுன் 1999. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேசா பிரஸ்). viii, 100 பக்கம்,