9461 கட்டு வைத்தியம்.

சே.சிவசண்முகராஜா. சுன்னாகம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், கந்தரோடை, 1வது பதிப்பு, மார்ச் 2000. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

(2), 44 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×12.5 சமீ.

கட்டு வைத்தியம் என்னும் சிகிச்சைப் பிரிவு, சித்த மருத்துவத் துறைகளில் இரணசிகிச்சைப்பிரிவில் அடங்குகிறது. காலனியாதிக்க காலங்களிலும் விரணங்களுக்குச் சிகிச்சையளிக்கும் பிரிவானது கட்டு வைத்தியம் என்ற பெயருடன் இணுவில், பருத்திக்கலட்டி, நல்லூர், வடலியடைப்பு போன்ற இடங்களில் சில சித்த வைத்தியர்களால் சிறப்பாகக் கையாளப்பட்டு வந்தது. இந்நூல் யாழ்ப்பாணத் தமிழில் எழுதப்பட்டிருந்த கட்டு வைத்தியம் தொடர்பான ஒரு ஓலைச்சவடியின் அச்சுப்பதிப்பாகும். ஏட்டுப்பிரதியின் எழுத்தாளரின் பெயரோ, வைத்தியரின் பெயரோ அறியப்படவில்லை. ஏட்டிலுள்ள அளவைகளை தற்கால அளவைக்கு மாற்றியதுடன், சிகிச்சைமுறைகளை வகைப்படுத்தியும் இந்நுலில் வைத்தியகலாநிதி சிவசண்முகராஜா வழங்கியுள்ளார். நூலின் இறுதியில் கலைச்சொற்றொகுதி ஒன்றும் தரப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 130083). 

ஏனைய பதிவுகள்

13410 வர்த்தகம்: முதற் பகுதி.

ஹேம விஜயவர்த்தன (மூலம்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1977, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனம்). v, 69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: