9490 பொது நிதி அலுவலக முகாமைத்துவம்.

நாகமணி இராசநாயகம், ஜெயலட்சுமி இராசநாயகம் (இணை ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஜே.ஆர்.திறன், 140, சேர்.பொன் இராமநாதன் வீதி,  1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

viii, 432 பக்கம், விலை: ரூபா 650.,அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-98239-6-4.

அரச அலுவலகங்கள் வினைத்திறனும் விளைதிறனும் பயனுறுதியும் மிக்க சேவையினை வழங்கவேண்டிய தார்மீக கடப்பாடு உடைய மையங்களாகும். இவ்வலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தாபனக் கோவை, நிதிப் பிரமாணங்கள், சுற்று நிருபங்கள், அலுவலக நடைமுறைகள், அரசியல்அமைப்புக்கள், வர்த்தமானி என்பவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இவை அனைத்திலும் உள்ள முக்கியமான விடயங்களைத்; தொகுத்து பொதுநிதி அலவலக முகாமைத்துவம் என்ற இந்நூல் இலங்கை கணக்காளர் சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட கணக்காளர் திரு.நாகமணி இராசநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. அலுவலக நடைமுறைகள், அலுவலக ஒழுங்கமைப்பு, அதிகாரக் கையளிப்பு, பணியாளர் உறவுகள், செயல்திறன் மதிப்பீடு, செயல்திறன் அபிவிருத்தியில் 5S, அலுவலக இடவசதி, அலுவலக கைந்நூல், புள்ளிவிபரங்களை சேகரித்தலும் பதிவும், படிவ முகாமை, கடிதம், அறிக்கை, தகவல் தொடர்பு, பொதுமக்கள் உறவுகள், பணியாளர் முகாமை, பதிவுச்சுவடிகள் முகாமை, கோவை நடைமுறைகள், கூட்டங்கள், தொழிற்சங்கங்களும்அவற்றின் உரிமைகளும், சிறுகுறிப்புகள், அலுவலக தாபன நடைமுறைகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் நியமனங்களும், லீவு, ஆசிரியர்களுக்கான லீவு, விசேட நோய்களுக்கான லீவு, பழைய மாணவர் சங்கம்,  பாடசாலை கல்விச் சுற்றுலா, இடமாற்றங்கள், சம்பளங்கள், புகையிரத ஆணைச்சீட்டுக்கள், கடமையின் பொருட்டு உள்நாட்டு-வெளிநாட்டுப் பிரயாணங்கள், கடன்களும் முற்பணங்களும், குற்றங்கள், மேலதிக நேரம், விடுமுறை, விடுமுறைச் சம்பளங்கள், அரச இல்லங்கள், பொது நடத்தைகள், தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கான சலுகை, ஊழியர்களுக்கான தொடர்பாடல் வசதி, அரசியல் உரிமைகள் பிரயோகித்தல், தண்டனைகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், அரச வாகனப் பயன்பாடு, பேணப்படும் முக்கிய படிவங்கள், நிதிப் பிரமாணங்கள், மாகாணசபைச்சட்டம் அகிய தலைப்புகளில் 46 பிரிவுகளின்கீழ் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236971).

ஏனைய பதிவுகள்