9932 இலங்கையின் சுருக்க வரலாறு.

எச்.டபிள்யு. கோடிறின்றன் (ஆங்கில மூலம்), இ.இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு:  அரசகரும மொழி வெளியீட்டுக் கிளை, திருத்திய 2வது பதிப்பு, 1939. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

xviii, 182 பக்கம், வரைபடம், விளக்கப் படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

லண்டன் மாக்மிலன் கம்பெனி வெளியீடாக முன்னர் வெளிவந்த ஆங்கில மூலநூலின் தமிழாக்கம் இதுவாகும். மூல நூலாசிரியர் எச்.டபிள்யு. கோடிறின்றன்  முன்னை இலங்கையின் குடிச்சேவையினராவார். முன்னைநாள் இலங்கைத் தொல்பொருளியல் ஆணையாளர் ஏ.எம்.ஒகாது அவர்கள் எழுதிய தொல்பொருளியல் பற்றிய 12ஆவது அதிகாரத்தையும் உள்ளடக்கியது.  தொடக்கம்: இலங்கை பௌத்தத்தைத் தழுவல், துட்டகாமனியிலிருந்து சீகிரிய காசபன் வரை கி.மு.3ஆம் நூறிலிருந்து கி.பி. 6ஆம் நூறு வரை, பதினொராம் நூற்றாண்டில் நடந்த சோழர் வெற்றிவரை உள்ள நடுக்கால அரசாட்சி, பொலநறுவை மன்னர் 1070-1215, தம்பதெனிய, கம்பளை மன்னர்கள் 1215-1412, கோட்டைக் குல முறையும் அதன் போர்த்துக்கேய நேயரும் 1412-1551, சீதாவகையினதும் போர்த்துக்கலினதும் எழுச்சி 1551-1635, போர்த்துக்கேயர் ஆணையின் வீழ்ச்சி 1635-1656, இடச்சுக்காரர் வெற்றி 1656-1796, பிரிட்டிசார் பாலனம் 1796-1805, பிரிட்டிசார் பாலனம் 1805-1833, தொல்பொருளியல் : 1833இன் பின் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  14181). 

ஏனைய பதிவுகள்

13372 இலங்கையில் சிறுவர் வறுமை.

கிறிஸ்துவ சிறுவர் நிதியம், பாத்திமா நஸ்ரியா முனாஸ் (தமிழாக்கம்).  கொழும்பு 7: வறுமை ஆராய்ச்சி நிலையம், Centre forPoverty Analysis-CEPA, 29, Gregory’s Road, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).

16648 கறி வேப்பிலைகள் (சிறுகதைகள்).

குறிஞ்சித் தங்கம் (இயற்பெயர்: க.தங்கவேலு). சென்னை 600104: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பிராட்வே, 1வது பதிப்பு, ஜீலை 2021.  (சென்னை 21: மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்). 144 பக்கம், விலை: இந்திய