9941 நம் முன்னோரளித்த அருஞ்செல்வம்: மூன்றாம் பாகம்: இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும்.

ஜீ.ஸி.மெண்டிஸ், எஸ்.ஏ.பேக்மன். கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், 84, பிரதான வீதி, பெட்டா, 4வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1951, 2வது பதிப்பு, 1955, 3வது பதிப்பு, 1965. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட்).

xiii, 368 பக்கம், வரைபடங்கள், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

1936ஆம் ஆண்டில் வித்தியாபகுதியினர் வெளியிட்ட புதிய சரித்திர பாடத்திட்டத்துக்கமைய இந்நூல் பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதற்பகுதி, 1796ம் ஆண்டு தொடக்கம் இலங்கைச் சரித்திரம் மூன்று பாகங்களில் விபரிக்கப்படுகின்றது.  இலங்கையில் பிரித்தானிய ஆட்சி தாபிக்கப்படல் என்ற முதலாம் பாகம் 1796-1837 ஆண்டு காலத்திற்குரியது. இதில் பிரித்தானியர் வந்த காலத்தில் இலங்கையின் நிலைமை, கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றல், இலங்கையில் பிரித்தானிய ஆட்சி பலப்படுதல், தற்கால அரசாங்கமுறை உருவாதல் ஆகிய நான்கு அத்தியாயங்களும், நாட்டின் அபிவிருத்தி என்ற இரண்டாம் பாகத்தில் தோட்டங்கள் அபிவிருத்தியாதல், நீர்ப்பாசன முறைகள் புருத்தாரணமாதல், போக்குவரத்து சாதனங்கள், தோட்டங்கள் திறந்ததால் ஏற்பட்ட வேறு பயன்கள் ஆகிய விபரங்கள் பேசப்படுகின்றன. சமுதாய அரசியல் சீர்திருத்தங்;கள் என்ற மூன்றாம் பாகத்தில் தலைமைக்காரரும் குடியானவரும், மத்திய வகுப்பினர், அரசியற் சீர்திருத்தங்கள் ஆகிய மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நூலின் இரண்டாம் பகுதி 1796ம் ஆண்டு தொடக்கம் இரண்டாம் உலகமகாயுத்தம் வரையிலானது. இதில் 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மகா மாற்றங்கள், விஞ்ஞானம், கல்வி, மனித ஷேமாபிவிருத்தி, பிரான்சீய அரசியற் புரட்சியும் ஐரோப்பிய யுத்தங்களும், ஐரோப்பாவில் லிபரல், தேசியக் கொள்கைகளின் தோற்றம், ஜெர்மனியிலும் இற்றலியிலும் ஒற்றுமை, 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரான்ஸ், இங்கிலாந்து என்பவற்றின் நிலைமை, கிழக்கு, தென் கிழக்கு ஐரோப்பா, பிரித்தானிய ஏகாதிபத்தியம்-சுதந்திர டொமினியன்களின் வளர்ச்சி, இந்தியா மற்றும் குடியேற்ற நாடுகளில் பிரித்தானிய ஏகாதிபத்தியம், ஆப்பிரிக்கா, இந்து சமுத்திரத் தீவுகள், பசிபிக் சமுத்திரத் தீவுகள் என்பவற்றில் ஐரோப்பிய ஆதிக்கம் பரவல், தூரகிழக்கு நாடுகள், அமெரிக்க நாடுகள், முதலாவது உலக மகாயுத்தக் காரணங்களும் அதன் நிகழ்ச்சிகளும், சமாதான இயக்கமும் அதன் முறிவுகளும் ஆகிய இயல்களுமாக மொத்தம் இருபத்தைந்து இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

13A17 நம் முன்னோரளித்த அருஞ்செல்வம்: மூன்றாம் பாகம்: இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும்.

ஜீ.ஸி.மெண்டிஸ், எஸ்.ஏ.பேக்மன். கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், 84, பிரதான வீதி, பெட்டா, 2வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1951. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை).

xi, 368 பக்கம், வரைபடங்கள், படங்கள், விலை: ரூபா 3.75, அளவு: 18.5×12.5 சமீ.

1936-ம் ஆண்டில் வித்தியா பகுதியினர் வெளியிட்ட புதிய சரித்திர பாடத்திட்டத்துக்கமைய எழுதப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2770. பின்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9941).

ஏனைய பதிவுகள்

Brief Hit Precious metal Ports

Content Symbols That enable Profitable Honors And you will Bonuses Inside the Slots Free Harbors 777 Have And you will Bonuses 100 percent free Harbors