9951 இலங்கையில் 16000 தமிழர் கப்பலேறிய கதை.

செ.வைத்திலிங்கம். கொழும்பு: செ.வைத்திலிங்கம், 1வது பதிப்பு, 1966. (கொழும்பு 14: சென். ஜோசப் அச்சகம்).

68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.

1956-1958 காலகட்டங்களில் இலங்கையில் நடைபெற்ற  அடக்குமுறைசார்ந்த அரசியல் வன்முறை 1958இல் இனக்கலவரமாக வெடித்தது. கொழும்பிலிருந்து 16000 தமிழர்கள் கடல்வழியாக வடபுலத்திற்கு பாதுகாப்புத்தேடிச் சென்ற அன்றைய அரசியல் நிகழ்வுகளை இந்நூல் தமிழில் பதிவுசெய்கின்றது. இத்தகைய நூலொன்றை ஆசிரியர் ஆங்கிலத்திலும் எழுதிப் பிரசுரித்திருக்கிறார். தார்சி விட்டாச்சி எழுதிய எமர்ஜென்சி 58 வெளிவந்த காலத்தில் இந்நூலும் வெளிவந்திருக்கிறது. திரு வைத்திலிங்கம் 1962இல் இலங்கையின் தமிழருக்கெதிரான அரசியல் போக்கைக் கண்டித்து லண்டன் சென்று மகாராணியாரை சந்தித்து அறிக்கையிட்டமையும் குறிப்பிடத்தக்கது. மிக மூத்த அரசியல் தலைவர்களான சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருவரது ஒற்றுமையற்ற தவறான அரசியல் போக்குகளால் தமிழ்மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போவதை 1960களிலேயே கண்டு கொதித்தெழுந்த நூலாசிரியரின் ஆணித்தரமான பதிவுகள் இவை.

ஏனைய பதிவுகள்

Russisk roulett Skuespil Børn

Content Slot online gnome: Rigtige Penge Gryphons Ufrugtbar Ingen Indbetalingsfrie Spins Slots 2024 Rejsebog Trillebø du alludere til spilleautomater pr. gavegive jackpots? Spela ansvarsfullt på

11294 சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்.

ந.இரவீந்திரன். கல்கிசை: புதிய பண்பாட்டுத் தளம், 13, மவுண்ட் அவென்யூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், இல. 54, கந்தசாமி கோவில் வீதி). xi, 175 பக்கம், விலை: ரூபா