9957 கண்ணீர் சிந்தும் சொர்க்கபுரி: வரலாறு மற்றும் முரண்பாட்டினூடான ஒரு பயணம்.

விக்டர் ஐவன் (ஆங்கில மூலம்), சென்தன் செல்வராஜா, எஸ்.கணேசன் (தமிழாக்கம்).  கொழும்பு: Embassy of the Federal Republic of Germany,  1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (மஹரகம: ராவய பதிப்பகம், இல.83, பிலியந்தல வீதி).

200 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-1468-17-0.

இந்த வெளியீட்டில்  “ராவய” என்ற சிங்களமொழிப்  பத்திரிகையின் ஆசிரியரான விக்டர் ஐவன், இலங்கையின் இனக்கலவரத்தின் வரலாற்றுரீதியான கூர்ப்பினை மிகவும் காத்திரமான வகையில் காட்டுகின்றார். தற்போதைய நெருக்கடியுடன் தொடர்புபட்டுள்ள பிரதான சம்பவங்களில் புகைப்படரீதியான ஒரு பொழிப்பினை வழங்குகின்ற வகையில் சுமார் 190 வருடங்களுக்கும் மேலானதொரு நீண்ட காலப்பகுதியை இப்புத்தகம் கடந்து செல்கின்றது. பிரச்சினையின் அதன் எல்லாச் சம்பவங்களுடனும் இணைத்துச் செல்கின்ற அந்தப் பாதை தொடர்பில் வாசகர் தனது கவனத்தைச் செலுத்துமாறு அவர் கோருகின்றார். அறிமுகம், முகவுரை ஆகியவற்றுடன் தொடங்கும் இந்நூல் பிரபுத்துவ முறையிலிருந்து முதலாளித்துவ முறைக்கு, மறுசீரமைப்புக்கான போராட்டம், சுதந்திரம் பெறுதல், நீதி நிர்வாகம் சீர்குலைவு ஆகிய நான்கு விரிவான அத்தியாயங்களினூடாக விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 206018).

ஏனைய பதிவுகள்