12708 – தமிழில் நாடகம்: கட்டுரைத் தொகுப்பு.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீடு, 54, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(44) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

இந்நூலில் தமிழில் நாடகம்: ஓர் ஆய்வுப் பார்வை, வடமோடி-தென்மோடி கூத்து வடிவங்கள்-ஒரு விபரண நோக்கு, பறைமேளக் கூத்து-மட்டக்களப்பு கூத்து வகை ஒன்று பற்றிய அறிமுகம், சிங்கள நாடக அரங்கு-ஒரு அறிமுகம் ஆகிய நான்கு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அனாமிகா வெளியீட்டுத் தொடரில் மூன்றாவது பிரசுரம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17710).

ஏனைய பதிவுகள்