கே.மோகன்குமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு: மாஸ்க் அட்வர்டைசிங் அன்ட் நியூ நந்தா ஓப்செட்).
(34), 130 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
இலங்கையில் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி வழிபாடுகள், சபரிமலை புனித யாத்திரை நடத்தும் அமைப்புக்கள், சங்கங்கள், சந்நிதானங்கள், தேவஸ்தானங்கள் பீடங்கள் பீடாதிபதிகள், இந்துமத பாராளுமன்ற உறுப்பினர்கள் குருஸ்வாமிகள் மற்றும் அடியார்களுக்கு உதவும் வகையில் 24ஆவது மண்டலபூஜையையொட்டி வழிபாட்டுப் பாடல்களுடன் கூடியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ஐயப்ப சுவாமி வழிபாடு மனிதனை தெய்வமாக்கவல்ல வழிபாடு என்றெல்லாம் போற்றப்படும் ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு யாத்திரையானது இன்று இலங்கையில் தேசிய அளவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்களை உள்வாங்கும் ஒரு யாத்திரையாக நடைபெற்று வருகிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44738).