அகளங்கன் (மலராசிரியர்). வவுனியா: வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (வவுனியா: நியூ வன்னிகுயிக் அச்சகம், 140/2, கண்டி வீதி).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
பல்வேறு மதத்தலைவர்கள், சமூகத்தலைவர்களின் ஆசிச் செய்திகள் மற்றும் வாழ்த்துச் செய்திகளுடன் வெளியிடப்பட்டுள்ள இம்மலரில் சில சிறப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. சித்திரத்தேர், வெள்ளோட்டம் ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயம் வவுனியா (சி.இரகுநாதபிள்ளை), வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தல வரலாற்றுச் சுருக்கம் (ஆலயபரிபாலன சபையினர்), இதயத்தேரிலிருந்து (சிற்பி கி.கலாமோகன்), வெளிவட்ட வீதி விநாயகருக்கு முகபத்திர வட்டத்தேர் (வேசரம்) (சிற்பி கி.கலாமோகன்), தேரின் அமைப்பும் தத்துவங்களும் (ஸ்தபதி சு.சண்முகவடிவேல்), சிந்திப்பவர்க்கருள் சிந்தாமணி விநாயகர் (அமரர் ச.நமசிவாயம்), நவமணிச் சித்திரத்தேர் நலமெல்லாம் சுரந்து வாழி (சீ.விநாசித்தம்பி), இத்தரை மாந்தர் துன்ப இருள் கிழித்து உலாவ வேண்டும் (கவிஞர் அகளங்கள்), வவுனியா, வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞ்சற் பாமாலை (அருட்கவி கல்மடு பொன் தில்லையம்பலம்), வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞ்சற் பாமாலை (அருட்கவி கல்மடு, பொன்.தில்லையம்பலம்), புதிய சித்திரத் தேரினை உருவாக்கிய சிற்பக்கலாமணி, சிற்பகலாரத்தினம் ஸ்தபதி திரு.கிருஷ்ணர் கலாமோகன் அவர்களுக்கு ஆலய பரிபாலன சபையினர் ‘சிற்பகலாகேசரி’ என்னும் பட்டம் வழங்கி அளித்த பாராட்டுப் பத்திரம் ஆகியவை இம்மலரை அலங்கரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35625. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008705).