12132 – காளி ஆச்சி.

வே.வரதசுந்தரம். கொழும்பு 6: சிவகாமி அம்மாள் பப்ளிக்கேஷன்ஸ், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

xx, 92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 17×12 சமீ.

இந்நூல் திருக்கோணமலை பத்ரகாளி அம்பாள் கோயில் கொடியேற்ற நிகழ்வின்போது 21.3.1999 அன்று கவிமாலையாக வெளியிடப்பட்டது. காளி ஆச்சி, தெய்வ சங்கல்பம், கோயிலின் தொன்மை, காவல் தெய்வம் காளி, கோணையப்பனை நோக்கும் பிராட்டி, மதனுடை நோன்றாள், அம்பாள் தேவஸ்தானம், நாயகியே நல்லமுதே, மறக்கருணை, எழில்மாரித் தாய், கவிதை பிறந்த கதை, திருவிளக்குப் பூசை, அன்னையை வழிபட்ட ஆதிசங்கரர், திருவிளக்குத் திருத்தொண்டு, திருவிளக்கு தொண்டர் கலியனார், தீபந் தூண்டிய சுண்டெலி, வளம்பல நல்கும் வைகாசிப் பொங்கல், சுகப்பிரசவம், கும்பவிழா, கொடியேற்றத் திருவிழா, ஊமை பேசிய அற்புதம், புருஷார்த்த தருமம் தரும் கோயில், என்ன சிங்காரம் எங்கள் ஈஸ்வரி, கௌரி நோன்பு, விரத முறை, கௌரி நோன்பின் பலன், அம்பாள் பக்தர் குமரகுருபரர், பராசக்தி பக்தன் பாரதி, அம்மையைப் பாடும் புரட்சிக் கவிஞர், காளி ஈந்த பகவத் கீதை, சக்தி வழிபாட்டில் மகாகாளி, ஸ்ரீசக்கரபூர்ண மகாமேரு, தாயிடம் நீ சென்று கேள், தாயே குளிர்ந்து அருள்வாய், காளியின் அன்புக்கு பாத்திரராவோம் ஆகிய தலைப்புகளில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28173).

ஏனைய பதிவுகள்