12168 – முருகன் பாடல்: இரண்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(8), பக்கம் 382-798, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2100., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. இவ்விரண்டாம் பகுதியில் குமரேச சதகம், செந்தினாயக சதகம், திருச்செந்தில்முருகன் சந்நிதிமுறை, காவடிச் சிந்து, சஷ்டி காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகிய பக்தி இலக்கியங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதி உருவாக அணிசெய்தவராக கொழும்பிலுள்ள திரு.பி.பாலசுந்தரம் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50755).

ஏனைய பதிவுகள்

16861 அமரர் ரோகிணி பரராஜசிங்கம் அவர்களின் சிவபதப்பேறு குறித்த 31ஆம் நாள் நினைவு மலர்.

குடும்பத்தினர். பருத்தித்துறை: அமரர் ரோகிணி பரராஜசிங்கம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

15736 மந்திரிக்கப்பட்ட சொற்கள் (சிறுகதைகள்).

இமாம் அத்னான். சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்). 88 பக்கம்,