பி.பா. பஞ்சாட்சரக் குருக்கள். யாழ்ப்பாணம்: பி.பா.பஞ்சாட்சரக் குருக்கள், ஐயனார் கோவிலடி, வண்ணார்பண்ணை மேற்கு, 1வது பதிப்பு, ஆவணி 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், இல.63, பீ.ஏ.தம்பி ஒழுங்கை).
xx, 80 பக்கம், தகடுகள், விலை: ரூபா 20.00, அளவு: 21.5×14 சமீ.
கேதாரவிரத நோன்புக் காலங்களில் பயன்படுத்தும் நோக்கில் கௌரி விரத நோன்புக் கதையை விரிவான வரலாற்று விளக்கத்துடனும், தமிழில் பூஜாகல்பத்துடன் கூடியதாகவும் இந்நூல்வழியாக நூலாசிரியர் பிரம்மஸ்ரீ பி.பா. பஞ்சாட்சரக் குருக்கள் அவர்கள் வழங்கியுள்ளார். இவர் யாழ்ப்பாணம் ஐயனார் கோவிலடி மேலை வண்ணை நகர் மங்கள மாகாளியம்மன் பரம்பரைப் பூஜாதுரந்தரர் இந்துப் பிரதம குரு ஆகமப் பிரவீன ஆகமாசார்யராவார். இந் நூலுக்குரிய மிகப்பழைய மூலக்கதையை கோயம்புத்தூர் பிரம்மஸ்ரீ சீ.வீ. இராமாமிர்த சாஸ்திரியவர்கள் தெலுங்கு மொழியிலுள்ள மிகத் தொன்மையானதும் கிடைத்தற்கரியதுமான விரதநூல் கல்பங்களிலிருந்தும் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல, நூலாசிரியர் தான் எழுதிவந்த குறிப்புகள், பூஜா கல்பமாகியவைகளைப் பயன்படுத்தி இதுவரை வெளிவராத புதிய தகவல்களுடன் கூடியதாக இந்நூலை எழுதியிருப்பதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32215).