எம்.ஐ.எல். பக்கீர்த்தம்பி. சம்மாந்துறை: கலாபிவிருத்திக் கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1961. (கொழும்பு: ஜமா அதே இஸ்லாமி அச்சகம்).
(8), 100 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18×12 சமீ.
தியாகத்தில் மலர்ந்த தீனுல் இஸ்லாம், இஸ்லாமிய நற்சிந்தனை 1-4, துருக்கியின் தந்தை முஸ்தபா கமால், உலக மக்களை உய்வித்தற்கு உதித்த உத்தமர் நபிகள் நாயகம், இலட்சிய வருடத்தின் ஹிதோபதேசம், கர்பலா காட்டும் பாதை, இஸ்லாம் தந்த விஞ்ஞானம், இஸ்லாமும் இறைவழிபாடும், இஸ்லாமும் வட்டியும், அகிலத்தின் அணையாத ஜோதியாய் விளங்கும் அண்ணல் நபிகள் நாயகம், அல்லாமா முஹம்மது இக்பாலின் இன்கவிகள் ஊட்டும் புத்துணர்ச்சி, முஸ்லிம்களுக்குத் தனி இராச்சியம் படைத்த ஈடிணையற்ற கர்ம வீரர், உமறுப் புலவர் கண்ட உத்தம நண்பர், பொறிகளை அடக்கி நெறியை வளர்க்கும் புனித நோன்பு, கிழக்கிலங்கையும் கல்வித் தரமும், அன்பே உருவான நபிகள் நாயகம் மானுக்குப் பிணை நின்ற மாண்பு, ஞான இலக்கியமாம் புர்கான் அருளப்பட்ட புனிதமான இரவு, சனநாயகம் வாழ உயிர்த் தியாகம் புரிந்த உத்தமர் ஹுசைன் (ரலி), வாய்ப்பறை சாற்றித் திரியாது வாழ்ந்து காட்ட வேண்டும், பொறாமைப் பேயை சமுதாயத்திலிருந்து களைவதே கற்றாரின் கடனாகும் ஆகிய 23 உரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இவற்றில் பெரும்பான்மையானவை இலங்கை வானொலி உரைகளாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2592).