தமிழ் மொழித்தின விழா செயற்குழு. ஹட்டன்: மத்திய மாகாண தமிழ்மொழித்தின விழா செயற்குழு, 1வது பதிப்பு, ஜுலை 1993. (ஹட்டன்: யுனிவர்சல் பிரின்டர்ஸ்).
(36) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 8 சமீ.
மலையகத்தில் ஹட்டன் நகரில் 4.7.1993 அன்று நடந்த மத்திய மாகாண தமிழ்மொழித்தின விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். பெரும்பாலும் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் விளம்பரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34616).