. இராகி (இயற்பெயர்: இரா. கிருஷ்ணபிள்ளை). காரைதீவு-2 (கிழக்கு மாகாணம்): இரா.கிருஷ்ணபிள்ளை, மலரகம், நடராசானந்தா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (காரைதீவு-12: மா.புஷ்பநாதன், நிதுஸ் ஓப்செற் அச்சகம்).
(6), 97 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14.5 சமீ.
பகையாலே உதயமான உறவு, உயிரினும் மேலது பக்தி, கண்ணன் தூது, பிரிவின் பிரிவு, மதுவுக்கு ஒரு முற்றுப்புள்ளி, உத்தமன், முயற்சி, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நமக்கு நாமே பிரச்சினை, சேற்றிலே ஒரு செந்தாமரை ஆகிய 10 நாடகங் களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. கலைப்பட்டதாரியான ‘பாண்டியூர் இராகி’ ஏறத்தாழ ஐம்பதாண்டுகால இலக்கியப் பரிச்சயம் உள்ளவர். ஆசிரியராகப் பணியாற்றி, அதிபராக ஓய்வுபெற்ற இவர் முன்னதாக இராகியின் உறவுகள் (சிறுகதைத் தொகுப்பு), இராகியின் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு), ஆன்மீகமும் விழுமியங்களும் (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய நூல்களை எழுதியவர். அரங்கியல் பின்புலத்தில் வளர்ந்த இவரது முதலாவது நாடகம் ‘மன்னிப்பு’ என்ற பெயரில் 894.8(2) தமிழ் நாடகங்கள் 440 நூல் தேட்டம் – தொகுதி 13 கல்முனை பாத்திமா கல்லூரியில் மேடையேறியது. அப்போது இவர் எட்டாம் ஆண்டில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47446).