12800 – காண்டாவனம்:சிறுகதைகள்.

சண்முகம் சிவலிங்கம். ஐக்கிய அமெரிக்கா: வெளியீட்டுப் பிரிவு, iPMCG Inc வெளியீடு, 3311, Beard Road, Fremont, CA 94555, 1வது பதிப்பு, மார்கழி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(17), 18-249 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22 x 14 சமீ., ISBN: 978-0-9863148- 3-4.

கல்முனை, பாண்டிருப்பைச் சேர்ந்த அமரர் சண்முகம் சிவலிங்கம் (1936-2012), கேரளா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி. இவர் உயிரியல் விஞ்ஞானம், ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் ஆகிய துறைகளில் இலங்கையில் ஆசிரியப் பணியாற்றியவர். இலக்கியத்துறையில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், விமர்சனம், நாடக எழுத்துரு, நெறியாள்கை, நடிப்பு என பல்பரிமாணங்களில் அறியப்பெற்றவர். நீர்வளையங்கள் (1988), சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் (2010)ஆகிய இரு கவிதைத் தொகுதிகளை ஏற்கெனவே எமக்களித்தவர். சண்முகம் சிவலிங்கம் எழுதிய சிறுகதைகளில் இருந்து தேர்ந்த 16 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை, திசைமாற்றம் (1975), மனித நேயமும் மண்ணாங்கட்டியும் (1980), காண்டாவனம் (1985), உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (1987), காட்டுத்தோடை (1987), உட்சுழிகள் (1988), போருக்குப் போனவர்கள் (1984), வாலி வதையும் வானரச் சேனையும் (1988), மரணப் பூட்டு (1989), வெளியேற்றம் (1990), பிரமாண்டம் நோக்கி (1990), படைகள் நகர்ந்த போது (1990), பிரகஷ்த்தம் (1989), தொலைந்துபோன கிரகவாசி (1992), லூ-லூ (1999), காலடி (1987) ஆகிய தலைப்புகளில் இவை 1975-1999 காலகட்டத்தில் எழுதப்பெற்றவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 246292CC).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Secretos

Content Alice in wonderland $ 1 Depósito – Combinación Desplazándolo hacia el pelo Características Para los Símbolos Sobre Book Of Ra Sus particulares De el