12227 – பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்.

M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் (மூலம்), எஸ்.எல். சியாத் அஹமட் (தொகுப்பாசிரியர்). காத்தான்குடி 30100: மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி, ஹிஸ்புல்லாஹ் ஸ்டேடியம் வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxviii, 900 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5ஒ15 சமீ., ISBN: 978-955-7838-00-7.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இதுவாகும். முஹம்மது ஹிஸ்புல்லாஹ் 1963ஆம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி பிறந்தவர். இவரது தந்தை ஒரு மார்க்க அறிஞராவார். ஆரம்பக் கல்வியை காத்தான்குடி அல் அமின் வித்தியாலயத்திலும், காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்திலும், அளுத்கமை சாஹிராக் கல்லூரியிலும் பெற்றவர். பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தபின் சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். அமரர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் இணைந்து 15.2.1989இல் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திப் பாராளுமன்றம் நுழைந்தவர். 19 வருட பாராளுமன்ற வாழ்க்கையில் இவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இலங்கை முஸ்லிம் உலமாக்களுக்காக உருவாக்கிய மட்டக்களப்புப் பல்கலைக் கழகக் கல்லூரியும், முஸ்லிம்களின் 1500 வருடகால வரலாற்றுப் பூர்வீகத்தையும் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த அளப்பரிய பங்களிப்புகளையும் வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக்கூற காத்தான்குடியில் பல வருடகால உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ள பூர்வீக நூதனசாலையும் இவரது சேவைகளில் சிலவாகும்.

ஏனைய பதிவுகள்

14438 தமிழ் உரைநடைத் தொகுப்பு (க.பொ.த. உயர்தரம்).

த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (8), 166 பக்கம், விலை