12249 – பொருளாதாரக் கொள்கைகள்.

ஆனொல்ட் ஹார்பேர்கர், போர்ஜ் லியுங்கிரன், றோபேட் வேட், ஜுவான் கார்லோஸ் டி பப்லோ (ஆங்கில மூலம்), மா.கருணாநிதி, டி.தனராஜ் (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால்பெட்டி எண். 601, இல.61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

Economic Policy என்ற தலைப்பில் Arnold Harberger, Robert Wade, Borje Ljunggren, Juan Carlos de Pablo ஆகியோர் எழுதிய கட்டுரைத்தொகுப்பின் தமிழாக்கம். இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள், இதன் தலையங்கம் கூறுவதுபோல் சந்தைப் பொருளாதாரம் எந்த வழிகளிற் செயற்படுகின்றது என்பது பற்றிய தெளிவான விளக்கத்தையும் ஏனைய பொருளாதார முறைமைகளுடன் ஒப்பிடும்போது ஏன் அது சிறந்ததாக உள்ளது என்பதற்குமான விளக்கத்தையும் அளிக்கின்றன. சந்தைப் பொருளாதாரம் பற்றி அதற்கு சார்பாகவும் எதிராகவும் பல தவறான எண்ணக் கருக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் நீண்ட மரபினைக் கொண்ட சோசலிசக் கருத்தியலானது சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமைகள் பற்றிய சந்தேகத்தை வளர்க்கும் மனோபாவங்களைத் தோற்று வித்துள்ளது. முதலாளித்துவம், சோசலிசம் திட்டமிட்ட பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் ஆகிய கருத்தாழம் மிக்க சொற்கள் பல காணப்படுவதுடன் ஒவ்வொன்றும் ஒருவரின் கருத்தியல் சார்பு நிலைக்கேற்ப நேர்கணிய, எதிர்கணிய பொருளைத் தருவதாக உள்ளது. இரண்டு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில் முதலாவது பகுதியில் பொருளாதாரக் கொள்கை பற்றிய சில படிப்பினைகள், அரசு மற்றும் சந்தை என்பனவற்றின் பங்கு பற்றி ஆழமான புரிந்து கொள்ளல், கிழக்காசியாவில் சந்தைகளை ஆட்சிபுரிதல் (அறிமுகம், கிழக்காசியப் பொருளாதார வெற்றியின் குறிகாட்டிகள், விவாதம், வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் சந்தைகளின் ஆற்றலை விருத்தி செய்வதற்கான அரச நடவடிக்கைகள், கிழக்காசிய அரசுகளை ஒழுங்குபடுத்தியது என்ன?, விவாதத்திற்கான பதிலிறுப்பு, முடிவுரை) ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில், ஒரு பொருளாதார அமைச்சரின் படுதோல்வியைத் தடுத்து நிறுத்துவது எப்படி? என்ற தலைப்பில் அறிமுகம், பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்துடன் தொடர்பான தவறுகள், பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்கல், பரம்பல் (விரிவாக்கம்) தொடர்பான தவறுகள், தனிப்பட்டதும் ஆளுமை தொடர்பானதுமான தவறுகள் ஆகிய அத்தியாயங்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22092. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008892).

ஏனைய பதிவுகள்

Ostmark

Content Winterberries $ 1 Kaution: Im Erreichbar Spielsaal unter einsatz von Handy Haben retournieren Bezahl-Apps pro das mobile Bezahlen in Ostmark Welches beste Kasino für