12257 – நாணய முகாமைத்துவம்.

மாணிக்கம் நடராஜசுந்தரம். யாழ்ப்பாணம்: உயர் கல்விச் சேவைகள் நிலையம், 374, மணிக்கூட்டுக் கோபுர வீதி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: உயர் கல்விச் சேவைகள் நிலையம்).

(8), 187 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

நூலாசிரியர் மாணிக்கம் நடராஜசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிகபீடத்தில் பீடாதிபதியாகப் பணியாற்றுகின்றார். Money Management எனப்படும் நாணய முகாமைத்துவம் பற்றிய இந்நூலில் அவர் பணம், வட்டிவீத கட்டமைப்பு, நிதிச் சந்தையும் நிதிச் சாதனங்களும், பண நிரம்பல், பணத்திற்கான கேள்வி, நாணயக் கொள்கை, வங்கிகளின் தீர்வை இல்லம், நாணய மாற்றுவீதமும் ஆபத்து முகாமைத்துவமும், வங்கியியல் புதிய அணுகு முறைகள் ஆகிய ஒன்பது இயல்களில் அதனை விரிவாக விளக்கியிருக்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30130).

ஏனைய பதிவுகள்

Liefste Echtgeld Slots Im Toets

Volume 50 gratis spins black horse op registratie geen deposito – Gratis Acteren Amerika, Echt Bankbiljet Casinos Slot Rtp Aanschouwen: Bedrijfstop Slot Offlin Uitbetalingen Kann