12259 – இலங்கையில் தமிழர் இறைமை.

சந்திரசேகரம் பரமலிங்கம். London: Segarams Publishers, 221A, Edgware Road, London NW9 6LP, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (தமிழ்நாடு: எழுத்து கலையகம், திருநெல்வேலி).

(42), 274 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-1-9999141-0-3.

‘சர்வதேசச் சட்டம், அரசுகளை மட்டுமன்றி, இன, மொழி, மத, சமூகப் பிரிவினரையும், அதனது விடயப்பொருளாகக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளது. இப்பின்னணியில், இந்நூல் தமிழர் இறைமைக் கோரிக்கையுடன் தொடர்புடைய சர்வதேசச் சட்டக் கோட்பாடுகள், சட்ட ஆவணங்கள், தேசிய, சர்வதேச, நீதி மன்றங்களது தீர்ப்புகள் என்பன இலங்கைத் தமிழர்களது இறைமைக் கோரிக்கைக்குத் தீர்வுகாண எவ்வாறு பொருத்தமுடையன என்று ஆராய்கின்றது. காலம் காலமாக, பல்வேறு துறைசார்ந்தோரால் இலங்கைத் தமிழர்களது வரலாறு, அரசியல், கலாச்சாரம் என்ற விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டாயிற்று. இலங்கைத் தமிழர்களது இறைமைக் கோரிக்கையின் சர்வதேசச் சட்டப் பரிமாணங்கள் எவை என்பதே இந்நூலின் அடிப்படைத் தேடுதலாக அமைகின்றது. இத்துறையில் இதுவே முதல் முயற்சி என நம்புகின்றேன்’ (நூலாசிரியர் முன்னுரையில்). இந் நூல் ஆய்வு பற்றிய பொது அறிமுகம், சர்வதேசச் சட்டத்தில் இறைமைக் கோட்பாடு, சர்வதேசச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை சட்டத் தத்துவமும், ஐ.நாவின் சட்ட கட்டமைப்பும், சர்வதேசச் சட்டத்தில் பிரிந்துசெல்லும் உரிமை, சர்வதேசச் சட்டத்தில் இறைமையும் மனித உரிமையும், சர்வதேசச் சட்டத்தில் சிறுபான்மை யோர் உரிமை, கொசோவா(Kosovo), குபெக் (Qubec) மக்களின் இறைமைக் கோரிக்கை, இலங்கைத் தீவின் வரலாற்றுப் பின்னணிகள், இலங்கையில் குடியேற்றவாதத்தின் முடிவாக்கம், தமிழ்த் தேசிய இனத்தின் இறைமைக் கோரிக்கையின் சட்டப் பரிமாணங்கள், சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் இறைமைக் கோரிக்கைக்கான தீர்வுகள் ஆகிய பதினொரு அத்தியாயங்களில் இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Rotiri gratuite fără plată 2024

Content Rotiri Gratuite Seven Casino 2024 | site-ul Cum pot verifica progresul și câștigurile între rotirile gratuite însă depunere? ROTIRI GRATUITE Însă Plată Rotirile gratuite