வி.கோகுலசிங்கம், ந.புஷ்பராசா (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(16), 186 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.
75 வருடகால வரலாற்றைக் கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம், அரைநூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட இளங்கதிர் என்னும் ஆண்டு மலரை இம்முறை பவளவிழா மலராக வெளியிட்டுள்ளது. அட்டைப்படக் கவிதை, மற்றும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியப்போட்டியில் வெற்றிபெற்ற ஆக்கங்கள், சங்க நடவடிக்கைகள் என நூற்றுக்கும் அதிகமான ஆக்கங்களுடன் இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57244).