12818 – உரிமையை விரும்பாத உறவுகள் (நாவல்).

அருணா செல்வம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2006. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

iv, 276 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 18 x 12 சமீ.

உறவுகளில் உரிமைகள் இருந்தால்தான் அந்த உறவுக்கே அழகு, மரியாதை எல்லாம் கூடிவரும். வாழ்க்கையில் ஆணோ, பெண்ணோ தனக்கு வாய்க்கப்போகும் துணை இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கற்பனை பண்ணிவைத்திருப்பார்கள். கடைசியில் அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் தமக்குக் கிடைத்த துணை தமது கற்பனைக்குத் தலைகீழாக அமைந்தும் விடலாம். அப்போது ஏற்படும் ஏமாற்றத்தின் காரணமாக அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொய்யான உறவுடனும், பொய்யான உரிமையுடனும்தான் முடியும் என்றுகூறும் கதாசிரியரின் கதாபாத்தரங்கள் இரண்டும் அப்படிப்பட்ட ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையை காலத்தின் கோலத்தால் பெற்றுக்கொண்டவர்களே. தமக்குக் கிடைத்த இந்த ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கையை அன்பாலும் பாசத்தாலும் பலப்படுத்தாமல் எரிச்சலாலும் கோபத்தாலும் சீரழிக்கமுனைவதே கதையின் போக்காகின்றது. உரிமைகளை விட்டுக்கொடுக்கலாம் -உறவுகள் பலப்படும் போது என்பதையும், உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது -உறவுகள் அழிந்து விடும்போது என்பதையும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். பிரான்சில் ஏநசழெn பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வாழும் நூலாசிரியரின் மூன்றாவது நாவல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41286).

ஏனைய பதிவுகள்