வ.ஆறுமுகம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைப் பதிப்பகம், 374, மணிக்கூட்டு வீதி, திருத்திய 2வது பதிப்பு, ஒக்டோபர் 2000, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைப் பதிப்பகம்).
(4), 128 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.
யாழ்ப்பாணத்தில் சைவக்கல்விப் பாரம்பரியம், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சைவக் கல்வியின் நிலை, எமது கல்வி, ஆசிரியரின் பல்வகைத் தோற்றங்களும் செயற்பாடுகளும், கல்வியில் கடமையும் அர்ப்பணிப்பும், கல்வி அன்றும் இன்றும், 1970க்குப் பின் இலங்கைக் கல்வியில் புதிய போக்குகள் எதிர்பார்ப்பும் நிறைவேற்றமும், இலங்கைக் கல்வியில் மோர்கன் அறிக்கை, பன்மைச் சமூகத்தில் கல்வியின் நோக்கும் போக்கும், சுதந்திர இலங்கையில் கல்வியில் மொழிக் கொள்கை-பயன்நோக்கிய சிந்தனைகள் ஆகிய 10 அலகுகள் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டாம் பதிப்பின் இறுதிக்கட்டுரை இப்பதிப்பிற்கெனப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதுடன் 3வது அலகான ‘எமது கல்வி’ என்ற கட்டுரை திருத்திப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் பேராசிரியர் வ.ஆறுமுகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியற்துறைத் தலைவராவார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31261).