12315 – கல்வியியற் சிந்தனைகள்.

ச.நா.தணிகாசலம்பிள்ளை. திருக்கோணமலை: ச.நா. தணிகாசலம்பிள்ளை, கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம், 39, அருணகிரி வீதி).

xii, 90 பக்கம், தகடுகள், விலை: ரூபா 125., அளவு: 24×18 சமீ.

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களின் வினைத்திறன் மேம்பாட்டிற்கான சிந்தனைகள், கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை அவர்கள் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டமிடல் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். கல்வியின் வரையறை, கல்வியின் முக்கியத்துவம், கல்வியும் சுகவாழ்வும், கல்வியும் உடல் உறுதியும், ஆசிரியரும் அர்ப்பணிப்பும், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் உயர்த்தப்படும் உயர்பதவிகள், சமூக உறவும் பள்ளிக்கூடமும், கல்வியை நிர்வகிப்பதில் மனித வளத்தின் இன்றியமையாமை, கல்விப் பிரச்சினைகளின் பொதுக் காரணிகள், கல்வி நிர்வாகக் கட்டமைப்பு மாற்றம், தாயூட்டும் கல்வியின் அவசியம், கிராமக் கல்விக் களம், சமூக நிதி அளிப்பும் பள்ளிக்கூட விருத்தியும், பள்ளிக்கூடம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், நீங்கள் எங்கு போகின்றீர்கள்? கல்வியும் சமூக வளர்ச்சியும் தலைமை பற்றிய சமூகவியற் கொள்கையும், அழகியவுணர்வு அகத்தை அமைதிப்படுத்தும், கல்விக் குடும்பமும் தொழிற் குழுக்களும், கற்றற் கவின் நிலையும் கற்பித்தற் கவின்நிலையும், பாடசாலை நிறுவன உள்ளகக் கட்டமைப்பு ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21168).

ஏனைய பதிவுகள்