டீ.ஏ.பெரேரா. மகரகம: கல்வி ஆராய்ச்சித் துறை தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (மகரகம: அச்சிடற் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம்).
(2), 73 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ., ISSN: 1391-1635.
கலாநிதி C.W.W.கன்னங்கரா அவர்களின் ஞாபகார்த்தப் பேருரையாக 13.10.1997 அன்று நிகழ்த்தப்பட்ட உரையின் எழுத்து வடிவம். அரசு, பாடசாலைக் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முனையும் வேளையில் கவனத்திற்கெடுக்கவேண்டிய மிக முக்கிய அம்சம் வகுப்பறையில் நிகழும் மாற்றங்களாகும். இதில் சம்பந்தப்பட்ட இரு பாத்திரங்களான ஆசிரியர்-மாணவர் ஆகிய இருவருக்கும் தற்போதுள்ளதைவிட அதிக சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும் என்றுகூறும் டீ.ஏ.பெரேரா, இலங்கையில் முறைசார் பாடசாலைகளின் தோற்றத்தை, தற்போது முறைசார் பாடசாலைகளில் பிள்ளைகளின் கல்வியின்மீது அரச செலுத்தும் அதிகாரத்தினதும் கட்டுப்பாட்டினதும் நோக்கிலிருந்தும் அது எவ்வாறு தோன்றியது என்ற நோக்கிலிருந்தும் இவ்வுரையைத் தொடங்குகின்றார். இரண்டாவதாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எவ்விதமான சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பான தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். இறுதியாகத் தொடர்ந்து நிலவும் சில பிரச்சினை களையும் பாரிய அளவு சுதந்திரத்துடன் அவற்றைத் தீர்க்க முடியுமா என்பதையும் தற்போதைய அரசியல் பண்பாட்டுச் சூழலைக் கவனத்திற்கொண்டு விவரிக் கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56694).