12330 – பாரம்பரிய தொழிற்பயிற்சி முறையில் உய்த்துணரத்தக்க கல்வி முறைகள்.

நாகமுத்து தணிகாசலம்பிள்ளை. கொழும்பு: ச.நா. தணிகாசலம்பிள்ளை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குயளவ Pசiவெநசளஇ 289, ½, காலி வீதி).

60 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 17.5ஒ12.5 சமீ., ISBN: 978-955-50250-4-1.

பாரம்பரிய தொழிற்பயிற்சி முறையில் உய்த்துணரத்தக்க கல்வி முறைகளின் முக்கியத்துவம் பற்றிய மூன்று இயல்கள் கொண்ட ஆய்வாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கல்விமுறையில் தொழில் முன்னிலைக் கல்வியின் அவசியம், தொழில் முன்னிலைக் கல்வியின் பாடங்கள், தொழில் முன்னிலைப் பாடங்கள் கல்விமுறையில் சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள், தொழில் முன்னிலைப் பாடங்களின் பகுப்பு முறை, தொழில் முன்னிலைக் கல்வியான புதிய கல்விமுறை பற்றிய ஓர் ஆய்வு, இப்பாடங்களில் முக்கியமானது பாரம்பரிய தொழிற்பயிற்சி முறை, பாரம்பரிய தொழிலின் சமகால நிலை, பாரம்பரிய தொழில் பற்றிய ஆய்வு மதிப்பீட்டை நவீன தொழில் முறையுடன் ஒப்பீடு செய்தல், நவீன முறையில் ஊறிய பாரம்பரிய முறையைச் சேர்த்து மாற்ற முடியாமைக்குக் காரணம், தொழில்முன்னிலைப்பாட மீன்பிடித் தொழில் பாடத்திட்டம் பற்றிய ஓர் ஆய்வு, பாரம்பரியத் தொழிற்பயிற்சி முறையில் இருந்து பெறத்தக்க பயிற்றல் முறை, பயிற்சிக் கட்டங்களும் பயிற்சி முறைகளும், பயிற்றல்முறை மூலம் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளி ஒரு பூரண தொழிலாளி என்பதற்கான திறன்பேறுகள் ஆகிய அத்தியாயங்களின் வழியாக இந்நூல் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47462).

ஏனைய பதிவுகள்

12602 – பௌதிக இரசாயனம்: பகுதி 1:வாயுக்களின் நடத்தைக் கோலங்கள்.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: திருமதி சுபாசினி சத்தீஸ்வரன், 108, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295ஃ7, காங்கேசன்துறை வீதி). (4), 74 பக்கம், விலை: ரூபா 60.,

14249 நறுக்கென்று-மூன்று விரல் கேள்விகள்: சமூக சுயவிமரிசனப் பத்திகள் .

ஜெயந்தன் (இயற்பெயர்: செபஸ்தியாம்பிள்ளை போல் ஜெயந்தன் பச்சேக் அமதி). மன்னார்: விக்ரறீஸ் மீடியா, பேசாலை, 1வது பதிப்பு, புரட்டாதி 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xxiv, 92 பக்கம், விலை:

12370 – கலாசுரபி: தூண்டல்-01, துலங்கல்-01.

வு.கிருபாகரன், ஆ.கெங்காதரன்(மலராசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வதுபதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் அச்சகம், 424 ஏ, காங்கேசன்துறைவீதி).(24), 97 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:25×17.5 சமீ.கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள