12334 – முரண்பாட்டுத் தீர்வுக்கான கல்வி: ஆரம்பக் கல்வி ஆசிரியர் கைந்நூல்.

பதிப்பாசிரியர் குழு. மஹரகம: ஆரம்பக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை).

58 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×21.5 சமீ.

இந்நூலாக்கத்தின் பதிப்புக்குழுவில் பி.சுப்பிரமணியம், கே.ஏ.டீ.பீ.சரச்சந்திர, எஸ்.எம்.ஆர்.சூதீன், டீ.எம்.ஆர். ஜயசிங்க, K.W.லியனகே, பத்மா சுமணசீலா த சில்வா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மொழிபெயர்ப்பாளராக S.M.சூதீன பணியாற்றினார். இந்நூலில் முதலாம் ஆண்டுக்கானஅழகியற் கல்வி, ஆக்கத் தொழிற்பாடு, உடற்கல்வி ஆகியனவும், இரண்டாம் ஆண்டுக்கான மொழிவிருத்தி, மூன்றாம் ஆண்டுக்கான மொழிவிருத்தி, கணிதம், நான்காம் ஆண்டுக்கான சுற்றாடற் கல்வி, மொழி விருத்தி, மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான ஆரம்ப விஞ்ஞானம், ஆக்கத் தொழிற்பாடு ஆகிய பாடப் பரப்பு சார்ந்த ஆசிரியர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இவை அவதானமாகச் செவிமடுத்தல், உறுதியான வெளிப்பாடு, கூட்டுவலிமையை உறுதிப்படுத்தல், தனிநபர்களுக் கிடையிலான புரிந்துணர்வினை வலுப்படுத்தல், பிரச்சினையை வரைபுபடுத்தல், முரண்பாடு தீர்த்தல், பிறரை மதித்தல், ஆகிய விடயப் பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24318).

ஏனைய பதிவுகள்

17340 தேன் சொரியும் பூ (3.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,

12129 கந்தபுராணம்-யுத்தகாண்டம்: சூரபன்மன் வதைப்படலம் மூலமும் தௌி பொருள் விளக்க விரிவுரையும்.

ப்ரம்மஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), வே. சிதம்பரம்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீமத் வே. சிதம்பரம்பிள்ளை, மேலைப்புலோலி, 1வது பதிப்பு, ஆவணி 1938. (பருத்தித்துறை: மனோகர அச்சியந்திரசாலை). (7), 388+4 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,