12849 – வள்ளுவம் வழங்கும் தமிழர் தத்துவம்.

க.கணேசலிங்கம். சென்னை 600 090: க.கணேசலிங்கம், 21 (9/2), பீச் ஹோம் அவென்யூ, பெசென்ட் நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (சென்னை 5: மாசறு D.T.P,2, பார்த்தசாரதி தெரு, திருவல்லிக்கேணி).

144 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18 x 12 சமீ.

கவிஞரும் பொறியியலாளருமான இந்நூலாசிரியர் சைவசித்தாந்த கலாநிதி சித்தாந்தரத்தினம் க.கணேசலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் குப்பிழானைச் சேர்ந்தவர். திருக்குறளிள் நுண்பொருள்கண்டு தான் எழுதிய 14 கட்டுரைகளை இந்நூலில் தந்துள்ளார். வள்ளுவம் வழங்கும் தமிழர் தத்துவம், அகர முதல்வன், அறிவாகிய மெய்ப்பொருள், மெய் உணர்தல், அருளாகிய திருவடி, உயிரின் சார்புநிலை, இருள்சேர் இருவினை, ஊழிற் பெருவலி யாவுள?, இருமை கடந்த ஒருமை, நூலறிவும் உண்மையறிவும், மண்ணுலகும் விண்ணுலகும், இறப்பும் பிறப்பும், ஏற்றத்தாழ்வு அறவழி அல்ல, வள்ளுவர் கண்ட எண்ணும் எழுத்தும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக என் பார்வையில் ஒரு குறள், ஈரடியால் இருள் களைந்தான் ஆகிய இரு கவிப் படைப்பாக்கங்களும் சேர்க்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29962).

ஏனைய பதிவுகள்