12390 – சிந்தனை: மலர் 3 இதழ் 2 (ஜுலை 1970).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1970. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

77-160 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2. அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் சிவஞானசித்தியார் கூறும் லோகாயுதம் (வே.இராமகிருஷ்ணன்), யாழ்ப்பாண இராச்சியத்தின் தொன்மைபற்றிய சில பழைய கருத்துக்கள் (கா.இந்திரபாலா), 13 ஆம் நூற்றாண்டில் பாண்டி நாட்டிலிருந்த படை அமைப்பு (செ.குணசிங்கம்), இருப்புவாதம் ஓர் அறிமுகம் (பீ.ஏ. ஹ_சைன்மியா), இலங்கையின் மகாதேசாதிபதி (ஏ.ஜெயரத்தினம் வில்சன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், செய்தியும் குறிப்பும் என்ற பகுதியில் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000709).

ஏனைய பதிவுகள்