12427 – நித்திலம் 2010.

எஸ்.சிவநிர்த்தாநந்தா (பதிப்பாசிரியர்), ச.சிறிதரகுமார் (உதவிப் பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: CSDI பிரிவு, வலயக்கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 306 மத்திய வீதி).

xii, (28), 212 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20 சமீ.

திருக்கோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் CSDI பிரிவு, வருடாந்தம் வெளியிடத் திட்டமிட்டுள்ள ஆண்டு மலர் வரிசையில் இரண்டாவது இதழ் இதுவாகும். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், பதிப்பாசிரியர் உரைகளுடன் மும்மொழிகளிலும் எழுதப்பெற்ற 94 ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் தமிழின் செவ்வியல் இலக்கியத் தோற்றம் (அ.சண்முகதாஸ்), சங்கத் தமிழர் பண்பாடு (இ.பாலசுந்தரம்), தமிழ் வகுப்புகளில் புதிய அணுகுமுறைகள் (அ.அறிவுநம்பி), மாணிக்கவாசகர் இசைக்கூற்றில் மங்கையர் மாண்பு (இரா. சீதாலட்சுமி), கேடு இல் விழுச்செல்வம் (மனோன்மணி சண்முகதாஸ்), தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககால தகவல் தொடர்பு முறைகள் (கி.விசாகரூபன்), தமிழர் ஆடற்கலையில் நட்டுவாங்கக் கலைநுட்பங்கள் (இரா.மாதவி), கந்தபுராணம் காட்டும் சிவ வடிவங்கள் (மா.வேதநாதன்), கோல்புறூக் கமரோன் சீர்திருத்தங்கள் (அனுசூயா சேனாதிராஜா), செம்மொழித் தமிழில் விபுலாநந்தரின் யாழ்நூல் (சிவலிங்கம் சிவநிர்த்தானந்தா), அன்றாட வாழ்வில் தத்துவங்கள் சில (எஸ்.ஜே. யோகராஜா), தகவல் தொழில்நுட்ப யுகத்தில் மின்நூலகங்கள் சில குறிப்புக்கள் (மைதிலி விசாகரூபன்), மாணவர்களுக்கு கல்வியில் சமவாய்ப்பு எப்போது? (எஸ்.கே.ஆனந்தராஜா), வேரினில் வேறுபாடா? (எஸ்.சேஷாத்திரி), கிழக்கிலங்கையில் தோன்றிய பழந்தமிழ் இலக்கியம் ஒன்று (க.இரகுபரன்), தேம்பாவணி-பைதிரம் நீங்குபடலம்-ஒரு நோக்கு (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்), நாணய மாற்றுவிகித நிர்ணயிப்பும் கொள்வனவுச் சக்தி சரிசம மதிப்புக்கோட்பாடும் (ஜனாப் அ.அ.மு.நுபைல்), கண்ணிவெடி பற்றிய அறிவு அனைவருக்கும் அவசியம் (ஜனாப் இசட் தாஜிடீன்), சிகிரிய புராதன கலை ஆளுமை வெளிப்பாடு (சு. சீவரெத்தினம்), மலேசிய ஹைக்கூ கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் (நா. பாலகிருஷ்ணன்), அழுத்த முகாமைத்துவம் (கி.முருகுப்பிள்ளை), தமிழ்க் கலாச்சார மாற்றங்களும் அழிவுகளும் (எஸ்.எதிர்மனசிங்கம்), முறைசாராக் கல்வியின் அவசியம் (ஏ.குலேந்திரன்), தமிழ் சர்வதேச மொழியில் வைக்க அந்தஸ்து உள்ளதா? (என்.புவனேந்திரன்), இன்றைய வகுப்பறைகளே ஒரு நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை தீர்மானிக்கின்றது (ஏ.செல்வநாயகம்), இயற்கை எப்போதுமே கவிதைமழை பொழிகிறது (காசிப்பித்தன் க.ஜெகநாதன்), விழிப்புணர்வு வேண்டுமடா நண்பா (என்.சத்தியமூர்த்தி), கற்றல் கற்பித்தல் 5நு முறைபற்றிய கண்ணோட்டம் (பத்மலோஜனி அரியநாயகம்), செயற்கையான நுண்ணறிவு (மா.பாலசிங்கம்), முதல் இடை கடை (தாமரைத்தீவான்), அளவோடு ஆசைகள் (செ.ஞானராசா), சமாதானத்தின் சுவாசம் (முனையூரான் எம்.எம்.ஏ. சமட்), அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு (ச.தேவசகாயம்), முரண்பாடுகளும் அதனைப் பாடசாலைகளில் முகாமைத்துவம் செய்தலும் (சதாசிவம் பவானந்தன்), விடிவை நோக்கி (ரேவதி சதாசிவம்), நாம் இந்நாட்டின் ஆசிரியர்களாவோம் (எச்.எம்.எம்.மன்சூர்), விழுமிய கல்வியின் இன்றியமையாமை (வி.யோகேஸ்வரன்), நேற்றைய கடந்த நாளைய மனிதன் (ஏ.ஜே.முகமட் சாலி), தமிழுக்கு அமுதென்று பெயர் (வினோரஞ்சினி சபேசன்), கிராமத்தில் அற்புத திருக்காளாத்தீஸ்வரர் (நிரஞ்சனி நாகரத்தினம்), தற்கால உலகில் பிரசித்திபெற்ற வரவட்டை கடனட்டை (டர்மிளா இளஞ்செல்வன்), ஆசான் என்றால் என்ன?(சசிகலா நடேசபவானந்தன்), தமிழ்மொழியும் நாட்டுப்புறவியலும் (சிவகௌரி மோகன்), கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் (சுஜித்தா பிரகாஷ்), இஸ்ரேலில் இருபத்தொரு நாட்கள் (செல்வராஜினி புவனேஸ்வரன்), இன்றைய மாணவ சமுதாயம் (இரா.அன்பழகன்), வாழ்ந்தது போதுமடா (ஜெயவதனி மரியதாஸ்), மலரவேண்டிய மொட்டொன்று கருகுகின்றது (ஷ லோமி தீபிகா வரதசீலன்), சமூக அமைப்பும் கல்வியும் (பிரவினா கிரபராசா), கல்வி (இ.யாழினி), தந்தையின் கல்லறையில் ஓர் புலம்பல் (ந.நதுர்சியா), இணையத்தளத்தில் சரிவடைந்த மைக்கிரோசொப்ட் உத்திகள் (சி.அறிவாளன்), தமிழரின் வாழ்வு (மனோகரதாஸ் பிரதீபன்), மனதில் உறுதி வேண்டும் (மாதவநாயகன் சுதர்சன்), கனவுகள் மெய்ப்பட (நிலூமி ஜேசுதாசன்), கொடுத்து மகிழும் இன்பமே கோடிபெறும் (மாதுமை கண்ணதாசன்), சமாதானத்தின் பினஇலங்கை (பிரசாந்தி சிறிதரன்), எமது நாட்டில் சமாதானத்தைப் பேணுவோம் (ஆரபி ஜெய்க்குமார்), கல்வி எதிர்காலத்தில் கைகொடுக்கும் (சின்னத்தம்பி மகிரா), வெற்றிபெற்ற தேசத்தை சிறுவர்களுக்காகக் கட்டிஎழுப்புவோம் (இராசரத்தினம் நிரஞ்சலா), சமாதானம் (மனோகரதாஸ் பிரதீபன்), யு-ணு மனித உறவு மேம்பட ஆகிய தமிழ் மொழி ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56390).

ஏனைய பதிவுகள்