வே.உமாமகேஸ்வரன் (மலர் ஆசிரியர்). வாழைச்சேனை: ஆசிரிய ஒன்றியம், வாழைச்சேனைக் கல்விக் கோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).
(12), 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
06.10.1991 அன்று வாழைச்சேனைக் கல்விக் கோட்ட ஆசிரிய ஒன்றியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட சர்வதேச ஆசிரியதின விழாவின்போது விநியோகிக்கப்பட்ட சிறப்பு மலர். ஆசிச் செய்திகளுடன், பாலரைப் பயிலுங்கள் பயிற்றுங்கள், எம்பணி தொடர்வோம், பாடசாலை அதிபரும் சுற்றாடற் தொடர்பும், கல்வியில் சில முதன்மைகள், மாணவரின் மனப்பாங்கு விருத்தியில் ஆசிரியரின் பங்கு, இலங்கை ஆசிரியர் சேவை, ஆசிரியர் தினம், பாடசாலை வளர்ச்சியில் நல்லாசிரியர் நற்பண்புகள், மகாத்மாவே நீ வாழ்க, ஆசிரியத் தொழிலின் மகத்துவம், நிதரிசனம், வகுப்பறைக் கற்பித்தல், ஆசிரியத் தொழிலின் மகத்துவமும் மதிப்பும், அவருக்குப் பாராட்டு விழா, ஆசிரியத் தொழிலும் சில நடைமுறைப் பிரச்சினைகளும், நல்லாசிரியன், தமிழ்மொழி கற்பித்தலும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், கனத்த சுமையை, விபுலாநந்தரும் ஒரு ஆசிரியர், கல்விப் பயிரை வளர்ப்போமே, சிகரம், ஈசனே மன்னித்திடு, அர்த்தம் தேடும் ஆசிரியம், கண்ட பலன், பனைமரமே நீயும் நானும் ஒன்றுதான், அரசர்க்கு அரசன் ஆசிரியன், மனித தெய்வம், ஒளிவிளக்கேற்றுபவர் ஆசிரியர், வாழைச்சேனை கோட்டத்துப் பாடசாலைகளும் தரங்களும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியத்துவம் சார்ந்த கல்வியியல் கட்டுரைகளும், ஆக்க இலக்கியப் படைப்புகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39142).