12453 – இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்-2007.

மலர்க்குழு. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்).

ix, (3), 44 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

சிவஸ்ரீ மு.க.கந்தசாமி குருக்கள், ஜானாப் கே.முகமட்தம்பி, திரு.சி.சண்முகம் ஆகியோரின் ஆசியுரைகளுடனும், பீடாதிபதி திரு.க.பேர்னாட், கு.சிதம்பரநாதன், த.ம.தேவேந்திரன் அகியோரின் வாழ்த்துரைகளுடன் தொடங்கும் இம்மலரில், மனதில் உதித்தவை (பா.பரமேஸ்வரன், சு.சுவர்ணராஜ), மலர் முகம் (பொ. சத்தியநாதன்), இந்து மாநாட்டின் நோக்கம் (சதாசிவம் பவானந்தன்), சமயமும் அறிகையும் (சபா ஜெயராசா), பெருவாழ்வுக்கு திருமுறைகளே பெருமறையாகும் (பொன் தெய்வேந்திரன்), வன்னிப் பிரதேசத்தில் கிராமிய வழிபாட்டின் செல்வாக்கு (அகளங்கன்), இந்து மதத்தில் அறிந்ததும் அறியாததும்: சில குறிப்புகள் (த. சிவகுமாரன்), இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம் (து.ஜெயசுமதி), இந்து தத்துவஞானத்தின் உப நிடதங்களின் நிலை, இந்து மதத்தில் கடைப் பிடிக்கப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள், கிரியைகள் வெளிப்படுத்தும் உளவியல் உண்மைகள் (எஸ்.சுதர்சினி), கலைகளின் நோக்கம் கடவுளைக் காணல் (கே.எஸ். ரமேஷ்), அரங்குப் பெரியோர்கள் (மு.கௌரிகாந்தன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 009537)

ஏனைய பதிவுகள்