12498 – யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி: 150ஆவது ஆண்டு நிறைவு மலர் 1852-2002.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம் பிள்ளையார் அச்சகம்).

149 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.

கோப்பாய் பிரதேசத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயமும் பாடசாலையும் அமைப்பதற்கென வணக்கத்துக்குரிய றொபேட் பிறெண்ட் மற்றும் அவரது துணைவியார் 1849 நவம்பரில் வருகை தந்திருந்தனர். இதன்பின் ஒருஆலயம் அமைக்கப்பட்டு ஆலய வளவில் திருமதி. பிறெண்ட் அவர்களால் ஆங்கிலமொழி மூலம் பெண்களுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1852 ம் ஆண்டு இப்பாடசாலை தனித்துவமாக இயங்கத் தொடங்கியது. அப்பொழுது 36 பெண்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். மதகுருமாரின் மேற்பார்வையில் இப்பாடசாலை 1899 வரை இயங்கியதன் பின்னர் யாஃபுனித பரியோவான் கல்லூரியின் முகாமையின் கீழ் நிர்வகிக்கப்பட்டது. 1939 இல் திரு.பு.ளு. செல்லையா பாடசாலையின் தலைமை ஆசிரியரானார். புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சிரேஷ்ட சான்றிதழ் பரீட்சை 1940 இல் நடைமுறைக்கு வந்தது. இக்கால கட்டத்தில் செல்வி வயலெற் ஹட்சின்ஸ் அவர்களின் தலமையில் இயங்கிய பெண்கள் விடுதிப் பாடசாலையும் திரு.பு.ளு.செல்லையா அவர்களை தலைமை ஆசியராக கொண்ட ஆண்கள் பாட சாலையும் ஒன்றிணைக்கப்பட்டு 1945 இல் ‘கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி” எனும் பெயரில் இயங்கத் தொடங்கியது. இதன் முதலாவதுஅதிபராக திரு.பு.ளு.செல்லையாவும் பிரதிஅதிபராக செல்வி வயலற் ஹட்சின்ஸ் அவர்களும் கடமையாற்றினார்கள். இக்கல்லூரி தாபிக்கப்பட்டு 150 ஆண்டு நிறைவையொட்டி இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழின் மலர்க் குழுவில் திருமதி ச.கனகரத்தினம், சி.சிவலிங்கம், பே.சா.அ.அரியரத்தினம், க.சிவநேசராசன், ப. கணேசன், வி.லிங்கேஸ்வரன், திருமதி எஸ்.சிவஞானரத்தினம், வே.மகாலிங்கம், எஸ்.கே.தங்கவடிவேல், யோசப் தாவீது, சு.சண்முகதாசக் குருக்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஆசியுரை, வாழ்த்துரைகளுடன், கல்லூரி வரலாறு, அதிபர்கள், ஆசிரியரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அலுவலகர்களின் வரலாற்றுப் பட்டியல்கள், கல்லூரி வரலாறு, மன்றங்களின் அறிக்கை, மாணவர் பக்கம், விளையாட்டுத்துறை அறிக்கை, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், 2002 கல்லூரியின் நிகழ்ச்சித் தொகுப்பு, 150ஆவது ஆண்டு விழாச்சபை அறிக்கை என இன்னோரன்ன ஆவணப் பதிவுகளை இம்மலர் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34752).

ஏனைய பதிவுகள்

12822 – கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நாவல்).

கே.எஸ்.பாலச்சந்திரன். சென்னை 600078: வடலி, எண். 6/3, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 305 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21

12840 – திருக்குறள் (பொழிப்புரை).

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்), வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராசன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 2001. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்). viii,