12852 – அமைதி வழியும் மதுர மொழியும்.

ஆர்.மகேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 98 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-659-487-4.

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியா – 2011, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 2011 மே 20 முதல் மே 22 வரை நடைபெற்றது. தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் 2011 ஜுலை 8 மதல் 10ம் திகதிவரை நடைபெற்றது. இவ்வாறான இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் ஏற்கனவே இந்தியாவிலும், இலங்கையிலும் பல முறை நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய பல இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு பயணப் பதிவுகளை ஒன்று சேர்த்து ஆவணப்படுத்தும் முயற்சி இதுவாகும். இந்திய வர்த்தக சங்கத்தின் மூலமே இஸ்லாம் மலேசியாவில் வேரூன்றியது, ஏற்பாட்டுக்குழுவின் குளறுபடிகளால் திண்டாடிப்போன இலங்கைப் பேராளர்கள், ஆய்வு மாநாடுகள் ஆய்வு மாநாடுகளாக நடந்தால் மட்டுமே நோக்கம் நிறைவேறும், பேராசிரியர் நு‡மானுக்குத் தகுந்த கௌரவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும், கிராமத்துக் கல்யாண வீடுபோல நடைபெற்ற காயல்பட்டண விருந்தோம்பல், சர்ச்சையைக் கிளப்பிய பர்வின் சுல்தானாவின் ஆவேச உரை, காயல்பட்டணத்துக்கு காயல் என்ற பெயர் ஏன் வந்தது, அநாவசிய விஷயங்களை கவியரங்கில் சேர்த்துக் குழப்பலாமா? இலங்கைப் பேராளர்களுக்கு கவிக்கோ எட்டிக்காயானது ஏன்?, பேராசிரியர் எம்.எம்.உவைஸை கௌரவிக்கும் மாநாடு இலங்கையில் நடத்தப்படாதது ஏன்?, சிறப்பாக அமைந்த கலாநிதி வ.மகேஸ்வரனின் 894.8(621) இஸ்லாமியத் தமிழ், அரபுத்தமிழ் இலக்கியம் ‘சீறாப்புராணத்தில் உலா’ ஆய்வுக் கட்டுரை, முஸ்லிம் இலக்கியம் எழுச்சிபெற்ற 16-19ஆம் நூற்றாண்டு காலப்பகுதி, தமிழ் அரசர்களின் அன்பையும் கௌரவத்தையும் பெற்ற இராவுத்தர்கள், இஸ்லாமிய இசை மரபுக்கு சான்றாக விளங்கும் ‡பகீர்களின் தப்ஸ் பாடல்கள், நொண்டிச் சிந்தை முதலில் அறிமுகம் செய்தவர் ஒரு முஸ்லிம் புலவரே, பள்ளு இலக்கியம் படைத்து சாதியை மறுத்த இஸ்லாமிய இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம் படைத்த பெண் படைப்பாளர்கள், இஸ்லாமிய நாட்டுப்புறவியல்துறை தனிப்பிரிவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும், ஆகிய 18 தலைப்புகளில் எழுதப்பட்ட படைப்பாக்கங்கள் வழியாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு நிகழ்வுகளை ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். இவை முன்னர் ‘வண்ணவானவில்’ பத்திரிகையில் தொடராக பிரசுரமானது. நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பதில் நூலகராகவும், தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

14425 இன்பத் தமிழும் இலங்கையரும்: நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடுஆய்வரங்க மலர் (இரண்டாம் பாகம்).

சதாசிவம் சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், Institut International des Etudes Superieures, 70, Rue Philippe de Girard 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (தமிழ்நாடு: அச்சக விபரம்